இந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் நேற்று வர்த்தகம் உயர்வுடன் முடிந்தது. தொடர்ந்து இன்று (செப். 24) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,272.40 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 706.53 புள்ளிகள் சரிந்து 74,121.72 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 237.05 புள்ளிகள் சரிந்து 23,209.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.நிஃப்டி50 குறியீட்டில் சிப்லா, டெக் மஹிந்திரா, விப்ரோ, கிராஸிம், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் லாபம் பெற்றும் ஹெச்டிஎப்சி லைப், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிவில் வர்த்தகமாகின்றன. வங்கிப் பங்குகள் கடும் சரிவடைந்து வருகின்றன. மீடியா, பார்மா, ரியல் எஸ்டேட் தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து வருகின்றன. வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 பைசா சரிந்து 95.87-ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்துள்ளதால் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. Stock Market: Sensex drops 600 pts, Nifty tests 23,200