ஆசிய விளையாட்டு துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20-வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இந்தத் தொடரின் துடுப்பு படகுப் போட்டி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சல்மான் கான் மற்றும் சத்நாம் சிங் இருவரும் கலந்து கொண்டனர்.இந்தப் போட்டியில் சீனாவின் யி சூடி மற்றும் யிடே நீ 6:09.37 நிமிடங்களில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தையும் உஸ்பெகிஸ்தானின் பாவெல் சோரின் மற்றும் மெக்ரோஜ்பெக் மமத்குலோவ் ஆகியோர் 6:10.49 நிமிடங்களில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.இந்திய ஜோடியான சல்மான் மற்றும் சத்நாம் இவரும் 6 நிமிடங்கள் 13 விநாடிகளில் இலக்கைக் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்த வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்தினர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துடுப்பு படகுப் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். Rowers Satnam Singh and Salman Khan secured India's first ever men's double sculls medal at the Asian Games with a third-place finish in Nagoya on Thursday.