மேற்கு ரயில்வேயில் 2026-27 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 'குரூப் 'சி' பிரிவில் 21 பணியிடங்கள் மற்றும் முன்பு குரூப் 'டி' என அழைக்கப்பட்ட பிரிவில் 43 பணியிடங்களையும் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவில் சாதனைப் படைத்த விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: RRCWR/01/2026பணி: Sports Person (Sports Quota 202627)காலியிடங்கள்: 64 விளையாட்டுப் பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் விவரம்: 1. Athletics -72. Badminton -43. Cricket -44. Foot Ball -25. Kho, Kho -66. Driving -27. Volley Ball -38. 8. Power Lifting - 49. Boxing -410. Weight Lifting - 511. Basket Ball - 412. Gymnastics - 213. Hockey - 414. Wrestiling -215. Swimming - 216. Body Building - 217. Cycling - 218. Hand Ball - 419. Water Polo - 1தகுதி: 10-ஆம் வகுப்பு, ஐடிஐ, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட கல்வித் தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டுத் தகுதிகள் குறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு கூடுதல் கிரேடு சம்பளம் வழங்கப்படும்சம்பளம்: ரயில்வே விதிமுறைப்படி வழங்கப்படும்.வயது வரம்பு : 1.1.2027 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி, மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதுபற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரயில்வேயில் கிளார், தட்டச்சர் பணியில் பணியமர்த்தப்படுவர். 1.4.2026 தேதிக்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி , பெண்கள், சிறுபான்மையிருக்கு ரூ.250. இதர அனைத்து பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.rrc-wr.com இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Western Railway invites ONLINE applications from the eligible sports persons who are citizens of Indiaரயில்வேயில் குரூப் 'சி', 'டி' பணிகள்: சாரண-சாரணியர் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!