இயக்குநர் ஜேசன் சஞ்சய் தன் தந்தையான முதல்வர் விஜய்யை நடிக்க வைக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வேன் என்பதைம் கூறியுள்ளார். முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படம் வருகிற அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், நாயகனாக நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய்யிடம், “ஒருவேளை உங்கள் அப்பாவை (முதல்வர் விஜய்) இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அவரை வைத்து என்ன செய்வீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு ஜேசன், “அவரின் நகைச்சுவை உணர்வை வைத்துதான் எடுப்பேன். அவரிடம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிற விஷயம் அதுதான். அருகே இருந்து பார்த்தவரை அவரிடம் அலாதியான நகைச்சுவை உணர்வு உண்டு. எப்போதும் அவருக்குள் ஒரு குழந்தைதனம் இருக்கும். அவரை நடிக்க வைக்க வாய்ப்பு கிடைத்தால் அவரின் ஜாலியான பக்கத்தைத்தான் எடுக்க நினைப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரம், தன் திரைப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கொடுக்கும் நேர்மைறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு என் தனி அடையாளத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் ஜேசன் கூறியுள்ளார். ஜான்வி கபூரைத் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்த கயாடு லோஹர்! Director Jason Sanjay has spoken about what he would do if he got the opportunity to cast his father, Chief Minister Vijay, in a film.