தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் வரும் அக். 4 ஆம் தேதி சாலைவலம் மேற்கொள்ளவிருக்கிறார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. தவெக - சத்யபாமா, திமுக - சுகன்யா, அதிமுக - பானுமதி, இந்திய கம்யூ. - லட்சுமணன் , நாதக - கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.இந்த நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து அக். 4 ஆம் தேதி சாலைவலம் மேற்கொள்கிறார்.ருத்ராவதியில் தொடங்கி குண்டடம், தாராபுரம், மூலனூர் வழியாக தாசர்பட்டி வரை சாலைவலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இபிஎஸ் பிரசாரம்தாராபுரத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வரும் செப். 27-ஆம் தேதி 4 மணிக்கு கன்னிவாடி, 5 மணிக்கு மூலனூர், 6 மணிக்கு கொளத்துப்பாளையம், இரவு 7 மணிக்கு உப்புத்துறைபாளையம் (தாராபுரம் நகர்) ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.இரண்டாவது நாளாக திங்கள்கிழமை (செப். 28) மாலை 4 மணிக்கு குண்டடம், 5 மணிக்கு மானூர்பாளையம், 6 மணிக்கு உப்பாறு மூணு ரோடு, இரவு 7 மணிக்கு பொன்னாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாார்.மூன்றாவது நாளாக வரும் அக். 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தளவாய்ப்பட்டினம், 6 மணிக்கு தாராபுரம் காவல் நிலையம் அருகில், சாலைவலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்யவுள்ளார்.TVK leader C. Joseph Vijay is set to undertake a roadshow on October 4 in support of the party's candidates contesting the Dharapuram by-election.இடைத்தேர்தல்! முதல்வர் விஜய் 4 நாள்கள் பிரசாரம்!