சிக்கிம் மாநில பாஜக பொறுப்பாளராக ராஜு பிஸ்டா நியமனம்!

Wait 5 sec.

பாஜக கட்சியின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, டார்ஜிலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு பிஸ்டா சிக்கிம் மாநில பாஜக பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்தது.இதுதொடர்பா பாஜக சிக்கிம் ஊடகப் பிரிவு, ராஜு பிஸ்டாவின் அவரது அமைப்பு ரீதியான அனுபவம், இளம் வயதுக்கே உரிய ஆற்றல் மற்றும் பொதுச் சேவையின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை கட்சியை மேலும் வலுப்படுத்தும். சிக்கிம் மாநில பாஜக தலைவர் டி.ஆர். தாபா, ராஜு பிஸ்டாவின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு ரீதியான ஆற்றலுடன் அவரது வழிகாட்டுதலின் கீழ் பணியாற்ற மாநிலப் பிரிவு ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.சிக்கிமில் தனது அமைப்பையும், அடிமட்ட அளவிலான செல்வாக்கையும் வலுப்படுத்த பாஜக முயன்று வரும் சூழலில் ராஜு பிஸ்டாவின் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக அவர் வழங்கிய அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்திற்காக அப்பொறுப்பிலிருந்து விலகும் திலீப் ஜெய்ஸ்வாலுக்கும் மாநிலப் பிரிவு நன்றி தெரிவித்தது. அவரது பதவிக்காலம் கட்சியை வலுப்படுத்துவதிலும், கட்சித் தொண்டர்களை ஊக்குவிப்பதிலும், மாநிலம் முழுவதும் கட்சியின் இருப்பை விரிவுபடுத்துவதிலும் பங்காற்றியதாகக் குறிப்பிடப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன்ஆகியோரின் தலைமையின் கீழ் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று சிக்கிம் மாநில பாஜக பிரிவு தெரிவித்தது.