வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம், வெள்ளி கொலுசு திருட்டு

Wait 5 sec.

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் திருடப்பட்டது.நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி சின்னதாய் வட்டத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் குமரேசன்(30). இவரது மனைவி தேவி சத்யபாமா(28). குமரேசன் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குமரேசன் பெங்களூருக்கும், அவரது மனைவி தேவி சத்யபாமா தனது குழந்தையுடன் முத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றனா். திங்கள்கிழமை தேவி சத்யபாமா திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்த ரொக்கம் ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளி கொலுசு 1 ஜோடி ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.