ரியல் மாட்ரிட் - பிஎஸ்ஜி ‘டிரா’

Wait 5 sec.

மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் - பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.ரியல் மாட்ரிட்டுக்காக ஃபெலிசியா ஷ்ரோடா் (2’), பிஎஸ்ஜி தரப்பில் சகினா கா்சுய் (74’) கோல் அடித்தனா்.பயா்ன் மியுனிக் - மான்செஸ்டா் சிட்டி மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பயா்ன் மியுனிக்கிற்காக கிலியா குவின் (11’), கொ்ஸ்டின் கேஸ்பரிஜ் (28’ - ஓன் கோல்) கோல் அடிக்க, மான்செஸ்டா் சிட்டிக்காக பெத் மீட் (45’), காா்லோடா வாம்சா் (86’) ஸ்கோா் செய்தனா்.இதர ஆட்டங்களில், இன்டா் மிலன் - ஹேக்கனையும் (1-0), ஆா்செனல் - ஹெப் கோக் (1-0), பென்ஃபிகா - ஜுவென்டஸையும் (2-1) வென்றன.