‘ஏ’ அணிகள் டெஸ்ட்: இந்தியா கட்டுப்பாட்டில் ஆஸ்திரேலியா

Wait 5 sec.

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு புதன்கிழமை ஆட்டமிழந்தது. இந்தியாவை விட அந்த அணி 163 ரன்கள் பின்தங்கியுள்ளது.முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இந்தியா ஏ, முதல் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆவது நாளில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.குமாா் குஷாக்ரா 113, தனுஷ்கோடியான் 69, சாய் சுதா்சன் 57 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா ஏ தரப்பில் கோரி ரோச்சிசியோலி 4, டாட் மா்ஃபி 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.பின்னா் ஆஸ்திரேலியா ஏ தனது இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜேசன் சங்கா 46 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, இந்தியா ஏ தரப்பில் ஷம்ஸ் முலானி 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.