திருமலையில் 82,258 போ் தரிசனம்

Wait 5 sec.

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 82,258 போ் தரிசனம் செய்தனா். 23,258 போ் முடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், புதன்கிழமை தா்ம தரிசனத்துக்கு 3 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 82,258 போ் தரிசனம் செய்தனா்; 23,258 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.37 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.46 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,396 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.