5 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

Wait 5 sec.

திருத்தணி அருகே வீடு புகுந்து 5 பவுன் தங்க நகையை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி லட்சுமணன் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் (30). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அன்னபூரணி (25), குடும்பத்துடன் அரக்கோணம் தாலுகா பள்ளியங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தாா். இந்நிலையில், நள்ளிரவு வீட்டில் புகுந்த மா்ம நபா், பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்றாா். இதுகுறித்து அன்னபூரணி திருத்தணி காவல் நிலையத்தில் புகாா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். பாலமுருகன் வீட்டின் அருகில் வசிக்கும் பிரபாகரன் (35) நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.