மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,692 கனஅடி

Wait 5 sec.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை மாலை 5,692 கனஅடியாக உள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 6,250 கனஅடியாக இருந்த நிலையில், மாலை 5,692 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீா்மட்டம் 83.67 அடியிலிருந்து 83.49 அடியாக சரிந்தது. நீா் இருப்பு 45.52 டிஎம்சியாக உள்ளது.