விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் திரையரங்கில் 1700 நாள்களை நிறைவு செய்துள்ளது.இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானதிலிருந்து இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.காரணம், இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது.’இங்க என்ன சொல்லுது... ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?’ என்கிற வசனத்தை இன்றையகால இளைஞர்களும் பயன்படுத்தும் அளவிற்கு படத்தில் வசனங்களின் பங்கு அபாரமாக இருந்தன.இந்த நிலையில், சென்னை பிவிஆர் அண்ணாநகர் திரையரங்கில் 2021-ல் மறுவெளியீடு செய்யப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா தற்போது 1700 நாள்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவே, மறுவெளியீட்டில் 1500 நாள்களைக் கடந்த முதல் இந்திய திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைச் செய்த முதல் நடிகரானார் சூரி! The movie Vinnaithaandi Varuvaayaa has completed 1,700 days in theaters.