நடிகர் சூரி மண்டாடி திரைப்படம் மூலம் புதிய சாதனையைச் செய்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் நேரடியாகவே ஆயிரக்கணக்கான நடிகர்கள் கதாநாயகனாக அறிமுகமானாலும் வில்லனாக, குணச்சித்திர நடிகராக இருந்து பின் நாயகனானவர்களும் பெரிய இடங்களை அடைந்திருக்கின்றனர். தமிழ் மொழி என்றில்லாமல் பல மொழிகளிலும் இந்தப்போக்கு உள்ளது.அதிலும், நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாகும் போது பெரும்பாலும் நகைச்சுவையான திரைப்படங்களையே கையில் எடுப்பர். தமிழில் சந்திரபாபு, என். எஸ். கிருஷ்ணன், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என திரையில் வெற்றிகரமான நகைச்சுவை நடிகர்கள் பலரும் கதாநாயகனாக நடித்தும் வெற்றிகளைப் பெற்றனர். ஆச்சரியப்படும் விதமாக இந்தப் பட்டியலில் இணைந்த நடிகர் சூரி அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்து தான் ஒரு நகைச்சுவை நடிகர் என்கிற பிம்பத்தையே உடைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக வலம்வந்த சூரி விடுதலை திரைப்படம் மூலம் நாயகனானார். அப்படம் கொடுத்த வெளிச்சத்தால் கொட்டுக்காளி, கருடன் என அடுத்தடுத்த வித்தியாசமான கதைகளில் நடித்து கவனிக்க வைத்தார். மேலும், மாமன் திரைப்படத்தின் மூலம் மார்க்கெட் உள்ள ஹீரோவாகவும் மாறினார். தற்போது, நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான மண்டாடி திரைப்படமும் உலக அளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சூரியை நட்சத்திர நடிகராக மாற்றியுள்ளது. மேலும், இந்திய சினிமாவில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக இருந்து நாயகன் ஆனோர் பட்டியலில் அதிகம் வசூலித்த நடிகர் என்கிற சாதனையையும் சூரி பெற்றுள்ளார். கலையும் ஆன்மீகமும் ஒன்றுதான்: இளையராஜா The movie mandaadi, starring actor Soori, has neared the ₹100 crore mark in box office collections.