தெற்கு தில்லியில் அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் இடிப்பு!

Wait 5 sec.

தெற்கு தில்லியின் சத்தாய்பூர் பகுதியில் உள்ள சட்பாரி கௌசாலா சாலையில் சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தெற்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்பகுதியில் இருந்த சுமார் 20 வீட்டின் கட்டடங்கள் மற்றும் சில பண்ணை வீடுகள் உள்ளிட்ட பல அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கட்டடங்களை இடிப்பதற்கு புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்குத் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.சாலை விரிவாக்கப் பணிக்காக அந்தச் சாலைப் பகுதியைச் சீரமைக்கும் நோக்கிலேயே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மீட்கப்பட்ட நிலத்தின் அளவு மற்றும் பாதிக்கப்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.கேஜரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நவ. 16ல் விசாரணை!