தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தில்லியிலுள்ள நான்கு பள்ளிகள் உட்பட ஆறு பள்ளிகளுக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, போலீஸார் மற்றும் இதர அதிகாரிகள் பள்ளிகளைக் காலி செய்து, தீவிர சோதனையில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மிரட்டல்கள் குறித்து மூன்று அழைப்புகள் வந்ததாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் படைகள், மோப்ப நாய் படைகள் மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் பல காவல் குழுக்கள் பள்ளிகளுக்கு விரைந்தன என்றார். பின்னர் பள்ளிகளிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனைகள் நடைபெற்றன. இதுவரை சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. இது ஒரு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலாக இருக்கக்கூடும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். At least six schools in Delhi, including four schools in central Delhi, received bomb threat emails on Monday morning. Following the threats, police and other authorities started evacuation and anti-sabotage checks, officials said.கோழிக்கோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதல்: கால்பந்து வீரர் பலி; மற்றொருவர் காயம்