தமிழில் உருவான ஆக்டோபஸ் என்கிற தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. தமிழில் ஜீ5 ஓடிடி தற்போது ஆக்டோபஸ் (‘Octopus’) எனும் சஸ்பென்ஸ் திரில்லர் தொடரை உருவாக்கியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர் மர்மங்கள், உணர்வுகளைக் கொண்ட தொடராக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘Octopus’ 7 எபிசோடுகளைக் கொண்ட தொடராகும். இதில் நடிகர்கள் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஒரு இளம் பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அந்த உண்மையை கண்டறிய ஒரு நெருக்கமான அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். இந்த தேடல், மறைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்து எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு மர்மம், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது. இத்தொடர் ஜீ5 தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. தொடரின் டீசர் விடியோவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. The Tamil series Octopus is set to be released on OTT soon.