புதிய தலைமைச் செயலகம்; அரசியல் கட்சித் தலைவராக இருந்தால் என் நிலைப்பாடு வேறு: அமைச்சர் விஸ்வநாதன்

Wait 5 sec.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் ஓர் அரசியல் கட்சித் தலைவராக இருந்தால், என் நிலைப்பாடு வேறாக இருக்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் திங்கள்கிழமை (செப். 21) தெரிவித்தார்.தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்த தவெக அரசு, சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:நான் காங்கிரஸில் அமைச்சராக இருக்கிறேன். எங்கள் அரசு கூட்டணி அரசு. அமைச்சரின் பொறுப்பு அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்பதுதான். நான் ஓர் அரசியல் கட்சித் தலைவராக இருந்தால் என் கருத்து வேறுவாக இருக்கும். அதை எங்கள் கட்சித் தலைவரிடம் கேட்க வேண்டும். நான் ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஓர் அமைச்சர். எனவே, அரசு எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அமைச்சர் என்கிற முறையில் அரசு எடுக்கிற கொள்கை முடிவை நான் வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்.வடகிழக்குப் பருவமழை: கடலோர, டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! - முதல்வர் உத்தரவு!Higher Education Minister Viswanathan stated on Monday (Sept. 21) that if he were the leader of a political party, his stance regarding the proposal to establish the Secretariat at Pattinapakkam would be different.