வீட்டில் கோபி தன்னுடைய மனைவி சாந்தாவிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். "நீ பிள்ளையை வளர்க்கும் விதம் சரியில்லை. குழந்தையிடம் கனிவோடு இருக்க வேண்டியதுதான். ஆனால் அதற்காக அவனை இப்படி வளர்க்கக் கூடாது.... உனக்கு அவனை கட்டாயப் படுத்தத் தெரியலே...." என்றான் உரக்க. கூடத்தில் இருந்த பெரியவர் சண்முகம் வருத்தப்பட்டார். "சின்னப் பிள்ளையை எதுக்குக் கட்டாயப் படுத்தி வளர்க்கச் சொல்றான்?..... இவனை நான் கண்டிச்சுக் கட்டாயப்படுத்தியா வளர்த்தேன்?... இவன் வளர்ந்து ஆளாகலயா?... ஏன் இப்படிச் சத்தம் போடறானோ தெரியலயே.." என்று யோசித்தவர், மருமகள் சாந்தாவிடம் கேட்டே விட்டார். "என்ன நடக்கிறது நம்ம வீட்ல? ஏன் இப்படி கத்தறான்? என் பேரன் எப்பவும் புத்தகத்தை வச்சுப் படிச்சிட்டே தானே இருக்கான்... வேற என்ன செய்யணும்னு இவன் எதிர் பார்க்கறான்? அதிகமான கண்டிப்பும் கட்டாயமும் கெடுதல்னு அவன் கிட்ட எடுத்துச் சொல்லு.." அதற்கு மருமகள் அமைதியாகப் பதிலைச் சொன்னாள்; "மாமா நீங்க பயப்படற மாதிரி எதுவும் நடக்கல.. உங்க பேரன் சதா சர்வ காலமும் படிப்பு படிப்புன்னு முதல் ராங்க் வாங்கி ஆகணும்னு படிச்சிட்டே இருக்கான்.. சாப்பிட அவனுக்கு நேரம் இல்லையாம்.....ஒரு வாய் சாதத்தைக் கூட கட்டாயப் படுத்தி தான் ஊட்ட வேண்டி இருக்கு.. அதைத் தான் உங்க பிள்ளை சொல்லிட்டுப் போறார்... ." என்றாள் அவள். பெரியவர் சிரித்தபடி எழுந்து, சிறுவனின் அருகே வந்து நின்று வாஞ்சையுடன் சொன்னார்: "வயிற்றுக்கு ஆகாரம் போட்டால்தான் செல்லம் படிப்பும் நல்லா வரும். வா, எழுந்து வந்து சாப்பிடு.. நல்ல பிள்ளை இல்லே நீ?" சிறுவனும் சாப்பிட எழுந்து வந்தான்.A moral story that children should know.நீதிக் கதைகள்! நண்பர்களை காட்டு; உன்னைப் பற்றி சொல்கிறேன்!