விழுப்புரம்: பெளர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செப்டம்பர் 26-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடர்பு அலுவலர் என்.ஜெயந்த் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலிலில் செப்டம்பர் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் பெளர்ணமி கிரிவலத்தில் அதிகளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் செப்டம்பர் 26-ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது.விழுப்புரத்திலிருந்து செப்டம்பர் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.எதிர்வழித்தடத்தில் அதே நாளில் திருவண்ணமலை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.Full Moon Girivalam: Special train from Villupuram to Tiruvannamalai on Sept. 26!வடகிழக்குப் பருவமழை: கடலோர, டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! - முதல்வர் உத்தரவு!