8 மணி நேரம் ரயில் தாமதம்! பயணிக்கு ரூ. 35,000 வழங்க ரயில்வே-க்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

Wait 5 sec.

ரயில் 8 மணி நேரம் தாமதமானதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக பயணி ஒருவர் புகார் தெரிவித்த வழக்கில், ரூ. 35,000 இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் கடந்த 2024 செப்டம்பர் 23 ஆம் தேதி டாட்டா நகரிலிருந்து சம்பல்பூருக்குச் செல்ல 'இஸ்பாட் எக்ஸ்பிரஸ்' (Ispat Express) ரயிலில் இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார். அந்த ரயில் காலை 10.18 மணிக்கு டாட்டா நகரிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.50 மணிக்கு சம்பல்பூரைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரயில் தாமதமாகப் புறப்பட்டு, திட்டமிடப்பட்ட நேரத்தைவிட 8 மணி நேரம் 48 நிமிடங்கள் தாமதமாக சம்பல்பூரைச் சென்றடைந்தது. இந்தத் தாமதத்தால் ஏற்பட்ட உடல்ரீதியான, மனரீதியான, நிதிசார்ந்து கடினமான உளைச்சலுக்கு ஆளானதாக ரூ. 4.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி நுகர்வோர் ஆணையத்திடம் சஞ்சய் குமார் முறையிட்டார். இந்த வழக்கில் சஞ்சய் குமாருக்கு, துன்புறுத்தலுக்கான இழப்பீடாக ரூ. 30,000, வழக்குச் செலவுகளுக்காக ரூ. 5,000 என ரூ. 35,000 தொகையை ரயில்வே செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் கடந்த செப். 2 அன்று உத்தரவிட்டது. இந்தத் தொகையை 45 நாள்களுக்குள் செலுத்தவில்லை என்றால், பணம் செலுத்தப்படும் நாள் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் அத்தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது."பயணிகளின் நேரம் மதிப்புமிக்கது, ரயில் தாமதங்களுக்கான காரணங்களையும், அவை தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதையும் ரயில்வே நிர்வாகம் விளக்க வேண்டும். அது நிரூபிக்கப்படாத வரை, ஒவ்வொரு பயணியின் நேரமும் விலைமதிப்பற்றது என்பதை மறுக்க முடியாது" என்றும் ஆணையம் கூறியுள்ளது. Railways ordered to pay Rs 35,000 to passenger as train delayed by more than 8 hoursஅரசாணையை மறுபரிசீலனை செய்யும் உரிமையும் முதல்வருக்கு இருக்கிறது! ராஜ்மோகன்