பிகாரில் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஒரு கும்பல் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காணொலிகள் இணையத்தில் பரவிய நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிகார் மாநிலத்தின் ஜமுய் நகரில் செப். 19 அன்று மாலை பத்தாம் வகுப்பு மாணவியும், அவரது ஆண் நண்பரும் பயிற்சி வகுப்பு முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது ஆண்கள் கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துத் தாக்கியது. இருவரையும் அடித்து துன்புறுத்திய கும்பல், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது.அவர்களைத் துன்புறுத்திய கும்பலின் காணொலிகள் இணையத்தில் பரவிய நிலையில், வாகன பதிவு எண்ணைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வஜீத் தயாள் தெரிவித்தார்.அவர் இதுபற்றிப் பேசுகையில், "இச்சம்பவம் நடைபெற்று 2 நாள்கள் ஆகியும், அந்த மாணவனோ அல்லது மாணவியோ எங்களிடம் புகார் அளிக்கல்லை. அந்தக் காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நாங்களே பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்தோம்” என்று தெரிவித்தார்.இதுதொடர்பாக ஜமுய் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் பரவிய காணொலிகளைக் கொண்டு மாணவர்களைத் துன்புறுத்தியதாகக் கருதப்படும் சுமார் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை விரைவில் கைது செய்வோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.கும்பலால் அவர்கள் இருவரும் துன்புறுத்தப்படும் காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் அதனை கடுமையாக விமர்சித்துள்ளனர்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக ஊடகப் பதிவில், “இச்சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது ஆணாதிக்க மனப்பான்மை. இதுபோன்ற மனப்பான்மை சாதாரண ஒன்றாக மாறுவதற்கு ஆளும் அரசின் கண்மூடித்தனமான பக்தர்கள்தான் காரணம்” என்றும் குற்றம் சாட்டினார்.காணொலியில் அடையாளம் காணப்பட்ட நபர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, ”பொதுவழிச் சாலையில் ஒரு பெண்ணுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை?” என்று பிகார் மாநில பாஜக அரசிடம் கேள்வி எழுப்பினார்.அதேபோல ஆம் ஆத்மி, திரிணமூல் கட்சியினரும் இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.மாணவர் தற்கொலை விவகாரம்: ஐஐடி மும்பை இயக்குநர் ராஜிநாமா செய்யவில்லை!Three people have been arrested after videos circulated online showing a group sexually harassing a Class 10 student in Bihar.