மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், உலகளாவிய சூழல் மேம்பட்டதால் கச்சா எண்ணெய் விலை சரிந்தன. இதன் விளைவாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிலைபெற்றது.அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை குறித்த நம்பிக்கையால் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், இந்திய ரூபாய் வலுவடைந்ததும், உள்நாட்டுச் சந்தையின் சாதகமான போக்கு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் குறைந்ததும் இந்திய ரூபாயின் மதிப்பை உயர செய்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.86 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கி, பிறகு வலுவடைந்து வர்த்தகத்தின் இடையே ரூ. 95.72 என்ற அளவை எட்டியது. வர்த்தக முடிவில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.81 ஆக நிலைபெற்றது. இது வர்த்தகத்தின் முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 15 காசுகள் அதிகமாகும்.முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.96 ஆக இருந்தது.The rupee appreciated 15 paise to close at 95.81 against the US dollar on Monday.வாரத்தின் தொடக்க நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!