6 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் பாபர் அசாம்!

Wait 5 sec.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்.பாகிஸ்தான் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடியதால் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீதும், பாகிஸ்தான் வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் அசாம் மீண்டும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.பாபர் அசாம் ஆயில் அண்ட் கேஸ் டெவலப்மண்ட் அணிக்காக விளையாடவுள்ளார். கேப்டனாக அல்லாமல் ஒரு வீரராகவே அவர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் முதல் தர போட்டிகளில் விளையாடியிருந்தார்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் போதிய பயிற்சியின்றி பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக இழந்திருக்கலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. அதன் காரணமாகவே, கேப்டன் பாபர் அசாம் உள்பட மூத்த வீரர்கள் பலரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர்.கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை நியமித்தது குறிப்பிடத்தக்கது.Pakistan team captain Babar Azam is set to play in a domestic first-class cricket match after six years.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!