யுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்வி

Wait 5 sec.

அமெரிக்க அரசின் அழுத்தத்தால்தான் யுபிஐ பரிவர்த்தனைகள் மீது மத்திய அரசு கட்டணம் விதித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களுடன் காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்ரவர்த்தி பேசியதாவது, "நாட்டில் யுபிஐ பரிவர்த்தனை மீதான கட்டணம் முக்கியமான பிரச்னையாக மாறியுள்ளது. ஏனெனில், இதனால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.யுபிஐ - பெரும்பாலும் இரு பெரிய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. கூகுள் பே மற்றும் ஃபோன் பே ஆகிய இரு நிறுவனங்கள்தான் 80 சதவிகித சந்தையைக் கட்டுப்படுத்துகின்றன. இவை இரண்டுமே அமெரிக்க நிறுவனங்களாகும்.இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாக இருப்பதால், வருவாய் கிடைப்பதில்லை என இவ்விரு நிறுவனங்களும் அமெரிக்க அரசிடம் முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இரு அமெரிக்க நிறுவனங்கள் பயனடைவதற்காக, இந்தியர்கள் ஏன் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலுத்த வேண்டும்?இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசம் என்பதை அறிந்தே, இவ்விரு நிறுவனங்களும் இந்திய சந்தைக்குள் நுழைந்தன. சந்தையில் குறிப்பிட்ட பங்கைப் பெற்றவுடன், அவர்களின் கட்டமைப்பை மாற்ற வெளியிலிருந்து அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். இதற்கு எதிராக காங்கிரஸ் குரல் எழுப்பும்" என்று தெரிவித்தார்.எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைWhy should Indians pay thousands of crores every year so that two American companies can benefit? Congress MP Praveen Chakravarty asks