இசைஞானியின் ருத்ரதாண்டவம்! - டோரதி படத்துக்கு நடிகர் தனுஷ் பாராட்டு!

Wait 5 sec.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 10 ஆவது திரைப்படம் “டோரதி”. நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில், இந்தப் படம் 1990 காலத்தில் மதுரையில் நடைபெறும் கதைகளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் “கல்யாண விருந்து” உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. டோரதி திரைப்படம் நாளை (செப். 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் தனுஷ் இந்தப் படத்தைப் பாராட்டி இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி, நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், “டோரதி - கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பீஸ். இது துணிச்சலான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு படம். இதில் ஒவ்வொரு நடிகரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா அவர்களின் இசை உங்களை மிரளவைக்கும். இது அவரது ‘ருத்ரதாண்டவம்’ என்றே சொல்லலாம். நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில், என் அன்பு நண்பர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே-வில் விஜய் சேதுபதி? ரசிகர்கள் அதிர்ச்சி?Actor Dhanush has praised director Karthik Subbaraj's film "Dorothy".