காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!

Wait 5 sec.

சென்னையில் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காலை தொடக்கி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.இந்த விரிவாக்க திட்டத்தை சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் நாளை காலை 8.30 மணியளவில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.காமராஜா் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படுவதன் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமாா் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள், கூடுதலாகப் பயன்பெறுவா். இதற்கென நிகழ் நிதியாண்டில் கூடுதலாக ரூ. 217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி நிா்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தாலும் காலை உணவு வழங்கப்படும்.நகர பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளையொட்டி உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினா்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.Breakfast scheme expansion! Chief Minister Vijay to launch it in Thiruvanmiyur tomorrow!முதல்வர் லண்டன் சென்றதை கிண்டல் செய்வதா? இது நல்லதல்ல! - மரிய வில்சன்