வாரத்தின் முதல் நாளில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! பார்மா பங்குகள் ஏற்றம்! (செப். 21)

Wait 5 sec.

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிஃப்டி 23,400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வணிகமாகிறது. பார்மா, நுகர்பொருள் துறை பங்குகள் உயர்வுடன் வணிகமாகி வருகின்றன. தொழில்நுட்பத் துறை பங்குகள் சரிவுடன் வணிகமாகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை உயர்வுடன் தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 426 புள்ளிகள் உயர்ந்து 74,721 புள்ளிகளுக்கு வணிகமாகி வருகிறது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 23,392 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வணிகமாகி வருகின்றன. எஞ்சிய 20 நிறுவனங்கள் சரிவையே சந்தித்துள்ளன. அதிகபட்சமாக சன்பார்மா பங்குகள் 2.15% உயர்ந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஐடிசி பங்குகள் 1.79%, கோட்டாக் வங்கி 1.43%, எச்.டி.எல். டெக் 1.4%, ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்குகள் 1.33%, எச்.டி.எஃப்.சி வங்கி 1.33%, டெக் மஹிந்திரா 0.82% உயர்ந்துள்ளது.இதேபோன்று நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் எச்.டி.எஃப்.சி. லைஃப் 2.56%, சன்பார்மா 2.17%, எஸ்பிஐ லைஃப் 1.95%, ஐடிசி 1.79%, டாடா கம்சியூமர் 1.65%, கோட்டாக் வங்கி 1.43%, எச்.சி.எல். டெக் 1.39%, ஹிந்துஸ்தான் யூனிலிவர் 1.31%, டாக்டர் ரெட்டிஸ் 1.21% உயர்ந்துள்ளன.அதீத பயன்பாட்டிலும் வெப்பமாகாத ஸ்மார்ட்போன்! இன்ஃபினிக்ஸ் 70 ஹாட் அறிமுகம்!stock market Sensex, Nifty climb pharma, FCMG shine, IT drags