ரூ. 46 கோடி அளவில் காசோலை மோசடி நடைபெற்றதாக தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது மீது, நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.தமிழ் சினிமாவில் 80-களில் பல வெற்றிப் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள். இவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.இந்த நிலையில், நடிகை ராதாவுக்கு சொந்தமான, கையொப்பமிடப்பட்ட வெற்று காசோலைகளை அவருக்கு தெரியாமல் எடுத்து, சுமார் ரூ. 46 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக, நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ராதா அளித்த புகாரில், ஏஆர்எஸ் கார்டன் ஸ்டுடியோ என்ற பெயரில் அவர் நடத்தி வந்த வணிக பயன்பாட்டுக்காக, தனியார் வங்கியில் நடப்பு கணக்கு(current account) ஒன்றை பராமரித்து வந்தார். அதில், பயன்பாட்டுக் கட்டணங்கள், வரிகள் மற்றும் தோட்டப் பராமரிப்பு போன்ற செலவுகவுகளுக்காக, கையொப்பமிடப்பட்ட சில வெற்று காசோலைகளைத் தனது அறையில் வைத்திருந்துள்ளார்.பின்னர், ஜனவரி 2025-ல் ஸ்டுடியோ பெயரை ஆர்ஆர் கார்டன்ஸ் என மாற்றிய பிறகு, அவர் ஒரு புதிய காசோலைப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, பழைய புத்தகத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்.கடந்த செப். 17 அன்று, தனது வங்கியிலிருந்து வந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை ராதா, பழைய 5 காசோலைகள் அம்பிகாவின் பெயரில் பணமாக்குவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.தான் அந்தக் காசோலைகளைத் தனது சகோதரி அம்பிகாவிடம் கொடுக்கவில்லை என்றும், பணம் தேவைப்படும் வகையில் அவருடன் எந்தவொரு நிதிப் பரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை என்றும் கூறி, பணத்தை நிறுத்துமாறு உடனடியாக வங்கிக்கு தெரிவித்ததாக, நடிகை ராதா புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கு குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகவும் என்று கூறப்படுகிறது.Actress Radha has lodged a complaint against her sister, actress Ambika, and her brother, alleging a cheque fraud amounting to Rs 46 crore.3 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் ஹபீபி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!