ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும், புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே 7 மாதங்களாகப் போர் நீடித்து வரும் நிலையில், இரு தரப்பும் முழு வீச்சிலான போருக்கு மீண்டும் திரும்பத் தயாராக இல்லாத சூழல் நிலவுகிறது. ஈரான் புரட்சிகரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், எங்களைப் பாதுகாப்பதிலும் பதில் தாக்குதலிலும் நிச்சயமாகக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். உலகமே ஆச்சரியப்படும் வகையில், போர்க்களத்தில் புதிய திறன்களைக் கொண்ட புதிய ஆயுதங்களை நாங்கள் அறிமுகப்படுத்துவோம். எங்களின் முந்தைய இலக்குகளைப் போல அல்லாமல், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம். ஒரு நீண்டகாலப் போருக்கு தயாராக நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர். ஈரான் மீது புதிய நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் ஈரான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் மோதல் தீவிரமடைந்த நிலையில், சமீப நாள்களில் தாக்குதல்கள் குறைந்துள்ளது. ஆனால், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு நாடுகளும் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட்டுள்ளனர்.இந்தப் போர் ஏமனுக்கும் பரவியுள்ளது. ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி படையினர், சவூதி ஆதரவு அரசிடமிருந்து மேலும் பல பகுதிகளைக் கைப்பற்றியதோடு, சவுதி தலைநகரான ரியாத் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷிய நாடாளுமன்ற தேர்தல்! மீண்டும் வெற்றியை நோக்கி புதின் கட்சி! Iran has also warned that it will use new weapons if the United States continues to attack it.