யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு கோரி அமைச்சர் பிரபு வழக்கு!

Wait 5 sec.

தனக்கு எதிராக சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வரும் யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு கோரி தமிழ்நாடு கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.காரைக்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தவெகவைச் சேர்ந்த பல் மருத்துவரான டி.கே. பிரபு, தமிழ்நாடு அமைச்சரவையில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர், தனக்கு எதிராக யூடியூபர் மாரிதாஸ் சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில், பொய்யான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். எனவே, அவருக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜான் திலகவதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.Minister Prabhu files Rs 1 crore defamation suit against YouTuber Maridhas!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா? தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்வி