தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களும் இதில் காணொலி வாயிலாக கலந்துகொண்டுள்ளனர். பருவமழை நேரத்தில் மீட்பு நடவடிக்கைகள், நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்ரமிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது. CM vijay meeting with officials on northeast monsoon