தில்லி மற்றும் பிகாரில் சமீபகாலமாக பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா கவலை தெரிவித்தார். சமீபத்தில் பிகார் மற்றும் தில்லியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் குறித்து பிரியஙகா காந்தி வண்மையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பயங்கரமானவை, பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருவதாகவும், தற்போது அது மேலும் மோசடைந்துடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதையும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத சூழலில், பெரிய திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.தலைநகரில் கடந்த சில வாரங்களாகச் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. செப். 10 அன்று ஸ்வரூப் நகரில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 16 அன்று சதார் பஜாரில் உள்ள கடைக்கு எழுதுபொருள் வாங்கச் சென்ற சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார். மேலும் செப். 21 அன்று தலைநகரில் நடந்த தனித்தனி சம்பவங்களில் 6 வயது சிறுமி, 17 வயது சிறுமி ஆகியோர் பாலியல் தாக்குதலுக்கு ஆளானார்கள்.இவை தவிர, பிகாரின் ஜமுய் பகுதியில், சிறுவர்-சிறுமியர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சாலையோரத்திலிருந்த சிலரால் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.பெண்கள் பாதுகாப்பு விவகாரம் குறித்து அனைவரும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். மாநில அரசு, குறிப்பாக மத்திய அரசு, பெண்கள் பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.வயநாட்டில் தனது திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், இது ஒரு நீண்ட பயணம் என்பதால், முடிந்தவரை அதிகமான மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்தார்.105-ஆக உயர்ந்த ராமர் கோயில் முறைகேடுகள்: பின்னணியில் பாஜக? அகிலேஷ் குற்றச்சாட்டு!