2-வது ஒருநாள்: குசல் மெண்டிஸ் சதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 322 ரன்கள் இலக்கு!

Wait 5 sec.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து - இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.குசல் மெண்டிஸ் சதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 322 ரன்கள் இலக்கு!டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் குசல் மெண்டிஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 100 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 65 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், பவன் ரத்நாயகே 48 ரன்கள், ஜனித் லியாநாகே 32 ரன்கள் மற்றும் பதும் நிசங்கா 25 ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் மற்றும் ரிஹான் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.Batting first in the second ODI against England, the Sri Lankan team scored 321 runs for the loss of 6 wickets.வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்றுக் கொள்கிறேன்: கௌதம் கம்பீர்