மாணவர் தற்கொலைக்கு எதிராகப் போராட்டம்! மும்பை ஐஐடியில் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Wait 5 sec.

மும்பை ஐஐடியில் மாணவர் தற்கொலைக்கு எதிராகத் தொடரும் போராட்டத்தால் இடைத் தேர்வுகள் (மிட் செமஸ்டர்) ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மும்பை ஐஐடியில் சாஹில் வகோடே என்ற பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவர் கடந்த செப். 18 அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் தற்கொலைக்கு அவருக்கு சாதிரீதியான பாகுபாடுகள்தான் காரணம் என அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சாஹில் வகோடேவின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மும்பை ஐஐடி நுழைவு வாயில் அருகே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வரும் செப்.26 மற்றும் செப்.27 ஆகிய தேதிகள் நடைபெறவிருந்த இடைத்தேர்வுகள் அக்.10 மற்றும் அக்.11 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக இன்று (செப். 24) தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை மும்பை ஐஐடியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வர்ஷா கெயிக்வாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினரால் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.நாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தி Mid-semester examinations at IIT Bombay have been postponed due to ongoing protests against a student's suicide.