தன்னுடைய இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளர் பொறுப்பில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி அதன் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அணியை வழிநடத்துவது குறித்து கௌதம் கம்பீர் மனம் திறந்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்த இரண்டு ஆண்டுகள் கண் இமைக்கும் நேரத்தில் கடந்துவிடவில்லை. எனக்கு இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் இருந்ததாக நினைக்கிறேன். எனக்கென தனிப்பட்ட தோல்விகள் மற்றும் வெற்றிகள் இருக்கின்றன. ஆனால், மிகப் பெரிய பொறுப்பினை எடுத்துக் கொள்ளும்போது ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்.அதனால், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்த வடிவிலான கிரிக்கெட்டாக இருந்தாலும் எனக்கு கிடைத்த வெற்றிகளை நினைத்து எப்போதும் மகிழ்ச்சியடைவேன். ஆனால், எனக்கு தோல்விகளும் உள்ளன. வெற்றி, தோல்வி இரண்டையுமே நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். Indian team head coach Gautam Gambhir has stated that he has experienced many ups and downs during his two-year tenure as coach.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!