பாரதிய வித்யா பவன் அகில இந்திய துணைத் தலைவராக பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக பாரதிய வித்யாபவன் சாா்பில் கடந்த செப்.20-ஆம் தேதி நடைபெற்ற அறக்கட்டளை உறுப்பினா்கள், நிா்வாகக் குழு கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று, பாரதிய வித்யா பவன் நிா்வாகக் குழு உறுப்பினராக மிலிந்த் தியோரா தோ்வு செய்யப்பட்டுள்ளாா் என பாரதிய வித்யா பவன் நிா்வாகக் குழுச் செயலா் ஜெகதீஷ் லக்கானி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.