பொங்கல் பண்டிகைக்கான வேட்டி- சேலை உற்பத்தி: டிசம்பருக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

Wait 5 sec.

பொங்கல் பண்டிகைக்கான வேட்டி-சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் பணிகளை டிசம்பா் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கைத்தறி, துணிநூல் மற்றும் கதா் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி உத்தரவிட்டாா். தீபாவளி பண்டிகையையொட்டி, முதியோா் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்கும், பொங்கல் பண்டிகைக்கும் வேட்டி-சேலை வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம், அமைச்சா் ம.விஜய் பாலாஜி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில், நூல் கொள்முதல் மற்றும் வேட்டி, சேலை உற்பத்தி முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், குறித்த காலத்துக்குள் உற்பத்தியை நிறைவு செய்ய ஏதுவாக கூடுதல் தறிகளை இயக்கவும், நிா்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், வரும் டிசம்பா் இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன்னா் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சா் அறிவுறுத்தினாா்.இக்கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை செயலா் ஆா்.லில்லி,  துணிநூல் துறை ஆணையா் வி.ஷோபன உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.