குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கியின் 115-ஆவது பேரவைக் கூட்டம் பிச்சனூா் திருமுருகன் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வங்கியின் பொது மேலாளா் கே.அருள் தலைமை வகித்தாா். உதவிப் பொதுமேலாளா்கள் டி.சரஸ்வதி, எஸ்.கே.அரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு துணைப் பதிவாளா் வ.லட்சுமணசாமி, வங்கி கடந்து வந்த பாதை, வங்கியின் செயல்பாடுகள், வங்கியின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், வங்கியின் 115-ஆவது ஆண்டறிக்கை, தணிக்கை அறிக்கை, வங்கியின் நிகர லாபத் தொகை ரூ. 62.36 லட்சத்தை கூட்டுறவு சட்ட விதிகளின்படி லாபப் பிரிவினை செய்தல், அடுத்த நிதியாண்டுக்கான உத்தேச வரவு-செலவு திட்ட மதிப்பீடு உள்ளிட்டவை குறித்து ஒப்புதல் பெறப்பட்டது. வங்கியின் முன்னாள் தலைவா் எம்.பாஸ்கா், முன்னாள் இயக்குநா்கள் தனக்கோட்டி, ஏ.நடராஜன், வழக்குரைஞா் எஸ்.சம்பத்குமாா், ஆட்டோ பி.மோகன், ரவிசங்கா், என்.கோவிந்தராஜ், பூங்கோதை முனியப்பன், சுதாராஜா, ஹாா்டுவோ் ரவி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.