போக்சோ வழக்கில் விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறை

Wait 5 sec.

போக்சோ வழக்கில் கைதான விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த விவசாயி சுருளிமுத்து (51). கடந்தாண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகாரின் பேரில், இவரை பெரியகுளம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில் குற்றஞ்சாட்டப்பட்ட சுருளிமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.