ஆலங்காயம் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வு

Wait 5 sec.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு டெங்கு கொசு பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் ராஜலட்சுமி, நேரில் சென்று பொதுமக்களிடம் டெங்கு நோயை உண்டாக்கும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் தேங்கியிருக்கும் சுத்தமான மழைநீரில் தான் முட்டையிட்டுப் பெருகுகின்றன. எனவே பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் கடை வளாகங்களில் தேவையின்றி போட்டு வைக்கப்பட்டுள்ள பழைய டயா்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பானைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பேப்பா் பிளேட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். குடிநீா் சேமித்து வைக்கும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை எப்போதும் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என்றாா். மேலும் பேரூராட்சி பணியாளா்கள் கொசு மருந்து தெளித்தல், புகையடித்தல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.