பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்பு!

Wait 5 sec.

பொன்னேரியில் மருத்துவமனை ஊழியர் ராஜேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற பிரகாஷ் என்ற இளைஞரைக் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியில் இருந்தவர் ராஜேஸ்வரி (35). இவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றார். இந்தச் சம்பவத்தில் 85% தீக்காயங்களுடன் ராஜேஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரகாஷ், பெருஞ்சேரி மயான பூமி அருகே பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.பட்டாக்கத்தியால் வெட்டப்பட்டதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் தமிழரசன்.இதையடுத்து பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் தமிழரசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷை பிடிக்க முயன்றனர்.அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற பிரகாஷ், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் உதவி ஆய்வாளர் தமிழரசனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் உதவி ஆய்வாளர் தமிழரசனின் இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.இதையடுத்து தற்காப்புக்காக பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரகாஷ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கத்தியால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளர் தமிழரசனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, ராஜேஸ்வரி தொடர்ந்து பணிக்கு வரும்போது அவரிடம் பணம் கேட்டு பிரகாஷ் மிரட்டி வந்ததாக போலீசார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.In Ponneri, the police shot and apprehended a young man named Prakash, who had attempted to kill a hospital employee named Rajeshwari by dousing her with petrol.