தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!

Wait 5 sec.

தமிழ்நாடு முழுவதும் நேற்று 71 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 17,277 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் 71 பேருக்கு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 11 பேருக்கு புதிதாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் 17,348 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 4,653 பேருக்கு ஸ்க்ரப் டைபஸ் எனும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் பாதிப்பு தீவிரமாக உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளிலும், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பு பணி நடந்து வருகிறது. 17,348 people across Tamil Nadu have been affected by dengue so far தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (செப். 22)