வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!

Wait 5 sec.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக, காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதையடுத்து அதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் நேற்று காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இன்று தேனி, தென்காசி, கரூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.பருவமழை நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்ரமிப்பு நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. CM vijay meeting with officials on northeast monsoonதமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!