பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து, உடல்நலம், வருகைப் பதிவு, கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்முறையாக 2022-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் பயன் பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என தவெக அரசு அறிவித்திருந்தது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தையொட்டி, சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (செப். 22) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார்.காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் விஜய், சர்க்கைப் பொங்கல் பரிமாறினார். மேலும், அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து அவர் உணவு உட்கொண்டார்.அதன்பின்னர், பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!Chief Minister Vijay, who inaugurated the 'Perunthalaivar Kamarajar Breakfast Scheme', sat with school students and had the meal.