ஆசிய விளையாட்டுப் போட்டி குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் (31 வயது) வெள்ளி வென்று அசத்தியுள்ளார். மகளிர் பிரிவில் வெண்கலம் வென்றதும் கவனிக்கத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் இறுதிப் போட்டியில் பங்கேற்றார். மொத்தம் எட்டு பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் வெள்ளி வென்றார். தஜிந்தர்பால் சிங் டூர் தனது ஐந்தாவது வாய்ப்பில் 20.64 மீட்டருக்கு குண்டு எறிந்து அசத்தினார். ஈரானின் முகம்மத்ரேசா தயேபிசே 20.81 மீட்டருக்கு எறிந்து தங்கம் வென்றார். முதல் நான்கு வாய்ப்பில் 20.26 மீ., 19.77 மீ, 19.71 மீ. மற்றும் 20.64 மீட்டருக்கு எறிந்தார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்ச தூரம் எறிந்தார். கடைசி வாய்ப்பில் ஃபௌல் (தவறு) செய்ததால் 20.64 மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பஞ்சாபைச் சேர்ந்த தஜிந்தர்பால் சிங் டூர் முன்னதாக 2018, 2022 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார். தற்போது, வெள்ளி வென்று ஹாட்ரிக் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதுவரை ஆசிய விளையாட்டில் இந்திய அணி 4 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 29 பதக்கங்களை வென்றுள்ளது. ஸ்குவாஷ் பிரிவில் இரண்டு இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதும் கவனிக்கத்தக்கது. SILVER FOR TAJINDERPAL SINGH TOOR! Men's shot put final #AsianGames2026⏱️ 20.64 m, and the champion delivers again HIS SERIES20.06 | 20.26 | 19.77 | 19.71 | 20.64 | XDown in 3rd after round 4, he unleashed his best throw of the night when it mattered most,… pic.twitter.com/30EdrHNpJq— Athletics Federation of India (@afiindia) September 26, 2026வில்வித்தையில் தேசிய, ஆசிய சாதனைகளை முறியடித்த இந்திய வீரர்! Tajinderpal Singh Toor Wins 3rd Straight Asian Games Medal, Bags Silver In Shot Put