உத்தரகண்டில் பலத்த மழை: சார் தாம் யாத்திரை நிறுத்தம்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Wait 5 sec.

உத்தரகண்டில் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டது.உத்தரகண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. அதேவேளையில், மலைப்பாங்கான பகுதிகளில் அவ்வப்போது பனிப்பொழிவும் காணப்பட்டது. பலத்த மழை பெய்து வரும் நிலையில், மாநிலத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இன்று மதியம் முதல் செப்டம்பர் 27 வரை சார் தாம் யாத்திரை நிறுத்தப்படுவதாக கர்வால் ஆணையர் ஆனந்த் ஸ்வரூப் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகேஷ்வர், பித்தோராகர், சம்பாவத், நைனிடால் மற்றும் ருத்ரபிரயாக் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையும் அளிக்கப்பட்டது.டேராடூன், தெஹ்ரி, பௌரி மற்றும் ஹரித்வார் ஆகிய மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இக்காலகட்டத்தில் பல பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழையும், சில இடங்களில் மிகக் கடுமையான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கேட்டுக்கொண்டார். ஆறுகள், ஓடைகள் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார். Heavy rain lashed Uttarakhand on Saturday, prompting authorities to suspend the Char Dham Yatra till September 27 and shut schools in five districts as the Meteorological Department issued 'Red' and 'Orange' alerts for several parts of the state.பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி