பிரதமர் வேட்பாளர் விஜய்யா? காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்

Wait 5 sec.

வருகிற 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் அமைச்சர் பெ. விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.முதல்வர் விஜய்தான் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடுவார் என தவெக அமைச்சர்கள் கூறுவது குறித்து காங்கிரஸ் அமைச்சர் பெ. விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதுகுறித்து தென்காசியில் செய்தியாளர்களுடன் பெ. விஸ்வநாதன் பேசியதாவது, "கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இருக்கிற காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வு எதுவென்றால், 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் என்பது. இதில் பத்திரிகையாளர்களோ ஊடகவியலாளர்களோ எழுப்பும் குளறுபடிகள் எதுவுமே கிடையாது.தவெக அமைச்சர் நிர்மல் குமாரோ வேறு யாரேனும் சொன்னால் என்ன? ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என தமிழக முதல்வர் விஜய்யே அறிவிப்பார்.2021 - 2026 வரையிலான திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்தது. சட்டப்பேரவையில் வெளிநடப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது வெளிநடப்பு, ஜெய்ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பிய பிரச்னை, தமிழக அரசுக்கு எதிரான அரசியல் நடத்திய பிரச்னை எனப் பல்வேறு மோதல் போக்குகள் இருந்து வந்தன.ஆனால், இப்போது தவெக ஆட்சியில் அந்த மோதல் போக்குகள் இல்லை" என்று தெரிவித்தார்.திமுகவினரை பார்த்தால் வழக்கு; அதிமுகவினரை பார்த்தால் பெட்டி: தவெக மீது உதயநிதி கடும் தாக்குCongress Minister P. Viswanathan clarifies the stance on the Prime Ministerial candidate for the 2029 Lok Sabha elections