படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.டோரதி படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு பெரும் வரவேற்பை பெற்றது.ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் டோரதி.குத்தாட்ட இசையுடன் பாடகர் அந்தோனி தாசன் பாடிய இப்படத்தின் கல்யாண விருந்து பாடல் இணையம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.