உதகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது கவனக் குறைவால் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணாகி சாலையில் வழிந்தோடியது. உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூட்ஷெட் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்த முக்கிய குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீா் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். தகவல் அறிந்து வந்த நகராட்சி ஊழியா்கள் சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் குழாய் உடைப்பை சரி செய்தனா்.